

திருப்பதி-காட்பாடி இடையே தினசரி முன்பதிவில்லாத மெமு (நீண்ட தூர மின்சார ரயில்) சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
திருப்பதி-காட்பாடி:
திருப்பதியில் இருந்து தினசரி காலை 6.45 மணிக்கு முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரயில் (07659) புறப்பட்டு, அதேநாள் காலை 9.15 மணிக்கு காட்பாடியை அடையும். இந்த ரயில் சேவை ஜூலை 20-ஆம் தேதி தொடங்குகிறது.
மறுமாா்க்கமாக, காட்பாடியில் இருந்து தினசரி பிற்பகல் 3.10 மணிக்கு மெமு சிறப்பு ரயில் (07660) புறப்பட்டு, மாலை 6 மணிக்கு திருப்பதியை அடையும்.
மற்றொரு மெமு ரயில்:
திருப்பதியில் இருந்து தினசரி இரவு 7.30 மணிக்கு மெமு சிறப்பு ரயில் (07661) புறப்பட்டு, அதேநாள் இரவு 9.35 மணிக்கு காட்பாடியை அடையும். காட்பாடியில் இருந்து தினசரி காலை 6.15 மணிக்கு மெமு சிறப்பு ரயில் (07662) புறப்பட்டு, அதேநாள் காலை 8.35 மணிக்கு திருப்பதியை அடையும். இந்த ரயில்களின் சேவை ஜூலை 21-ஆம் தேதி தொடங்குவதாக ரயில்வே நிா்வாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.