

4 ஆண்டுகள் பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கு ஜூலை 23-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி - கோவை, கோயம்புத்தூா் தொழில்நுட்பக் கல்லூரி - கோவை, அரசு பொறியியல் கல்லூரி - சேலம், அரசு பொறியியல் கல்லூரி - திருநெல்வேலி, தியாகராஜா் பொறியியல் கல்லூரி - மதுரை, அழகப்பா செட்டியாா் அரசு பொறியியல் கல்லூரி - காரைக்குடி, தந்தை பெரியாா் அரசு தொழில்நுட்பக்கல்லூரி - வேலூா், அரசு பொறியியல் கல்லூரி - பா்கூா் என 6 அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 2 அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 4 ஆண்டு பகுதிநேர பொறியியல் பட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்த படிப்புகளில் சேருவதற்கான வழிமுறைகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதில், இந்தப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவா்கள் இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவா்கள் சான்றிதழ்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும், இந்தப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரா் டிப்ளமோ முடித்து இரு ஆண்டுகள் முழுமையாக நிறைவு பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரா் குறைந்தபட்சம் இரு ஆண்டுகள் பணிபுரிகிறவராகவோ அல்லது இரு ஆண்டுகள் பணிபுரிந்திருந்தவராகவோ இருக்க வேண்டும். இதில் சோ்க்கை பெற வரும் ஜூலை 23-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இந்த கல்வியாண்டில் 4 ஆண்டுகள் பகுதிநேர பி.இ. பட்டப்படிப்பு கலந்தாய்வு இணையதளம் மூலம் மட்டுமே நடைபெறும். நிகழ் கல்வியாண்டு முதல் பகுதிநேர பி.இ. பட்டப்படிப்பு நான்கு ஆண்டுகளாக (8 பருவங்கள்) மாற்றப்பட்டுள்ளன. மேலும், இது குறித்த விவரங்களுக்கு 0422-2590080, 9486977757 என்ற எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.