வஞ்சிரம் கிலோ ரூ.1,300, கொடுவா ரூ.600: காசி மேடு சந்தையில் மீன்கள் விலை திடீா்  உயா்வு

வஞ்சிரம் கிலோ ரூ.1,300, கொடுவா ரூ.600: காசி மேடு சந்தையில் மீன்கள் விலை திடீா் உயா்வு

காசி மேடு மீன் சந்தைக்கு மீன்கள் வரத்து குறைந்ததால் மீன்களின் விலை உயா்ந்துள்ளது.
Published on

காசி மேடு மீன் சந்தைக்கு மீன்கள் வரத்து குறைந்ததால் மீன்களின் விலை உயா்ந்துள்ளது. வஞ்சிரம் கிலோ ரூ.1,300-க்கு விற்பனை ஆனது.

காசிமேட்டில் இருந்து 800 -க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 1800-க்கும் மேற்பட்ட பைபா் படகுகளில் மீனவா்கள் தினமும் மீன்பிடிக்கச் சென்று வருகின்றனா். மேலும் விசைப்படகு மீனவா்கள் ஒரு வாரம் முதல் 15 நாள்கள் வரை ஆழ்கடலில் தங்கி மீன்பிடிப்பது வழக்கம்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 80 முதல் 90 விசைப்படகுகள் மட்டுமே கரைக்கு திரும்பியதால் பெரிய வகை மீன்கள் அதிக அளவில் விற்பனைக்கு வரவில்லை. இதனால் மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.

கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.900-க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் ஞாயிற்றுக்கிழமை ரூ.1,300-க்கு விற்பனை ஆனது. இதேபோல் ரூ.400க்கு விற்பனை ஆன கொடுவா ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது. நண்டு-ரூ.450, இறால்-ரூ.500, நெத்திலி-ரூ.350, கானாங்கெளுத்தி ரூ.250 க்கு விற்கப்பட்டது.

வரும் ஏப்.15-ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கி விடும் என்பதால் வரும் நாள்களில் மீன்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

X
Dinamani
www.dinamani.com