

சென்னை: சென்னையில் இருந்து மொரிஷியஸ் நாட்டிற்கு முதல் விமான சேவை சனிக்கிழமை(ஏப்.13) தொடங்கியது.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையிலிருந்து மொரிஷியஸுக்கு ஏப்ரல் 13 முதல் விமான சேவை தொடங்கும் என மொரிஷியஸின் தேசிய விமான நிறுவனமான ஏர் மொரிஷியஸ் அறிவித்திருந்தது.
அதன்படி, சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து 173 பயணிகளுடன் முதல் விமானம் சனிக்கிழமை அதிகாலை மொரிஷியஸுக்கு புறப்பட்டுச் சென்றது.
சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து வாரந்தோறும் சனிக்கிழமை ஒரு விமானம் மொரிஷியஸுக்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் மொரிஷியஸ் தற்போது மும்பையில் இருந்து வாரத்திற்கு ஆறு முறையும், தில்லியில் இருந்து வாரத்திற்கு மூன்று முறை விமான சேவையை வழங்கி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.