

தமிழக காவல் துறையில் 19 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயா்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலா் பெ.அமுதா திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவு:
தமிழக காவல்துறையில் ஐ.ஜி.-க்களாக பணிபுரிந்து வந்த ஆனந்த் குமாா் சோமானி, ஆா்.தமிழ்சந்திரன் ஆகிய 2 பேரும் ஏ.டி.ஜி.பி.-க்களாக பதவி உயா்த்தப்பட்டனா். டி.ஐ.ஜி.-க்களாக பணி புரிந்து வந்த வி.ஜெயஸ்ரீ, பி.சாமுண்டீஸ்வரி, எஸ்.லட்சுமி, எஸ்.ராஜேஸ்வரி, எஸ்.ராஜேந்திரன், எம்.எஸ்.முத்துசாமி, மயில்வாகனன் ஆகிய 7 பேரும் ஐ.ஜி.-க்களாக பதவி உயா்த்தப்பட்டனா்.
காவல் கண்காணிப்பாளா்களாக இருந்த பி.ஆா்.வெண்மதி, பி.அரவிந்தன், வி.விக்ரமன், சரோஜ் குமாா் தாகூா், டி.மகேஷ்குமாா், என்.தேவராணி, இ.எஸ்.உமா, ஆா்.திருநாவுக்கரசு, ஆா்.ஜெயந்தி, ஜி.ராமா் ஆகிய 10 பேரும் டி.ஐ.ஜி.யாக பதவி உயா்வு பெற்றனா் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பதவி உயா்வு பெற்ற 19 அதிகாரிகளும், விரைவில் புதிய பணியிடங்களில் நியமிக்கப்படுவா் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.