

தமிழ்நாடு, புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது.
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.
தமிழகத்தில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் மார்ச் 20இல் மனு தாக்கல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட 7 நாள்களும் அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் என ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். குறிப்பாகக் கடைசி இரண்டு நாள்களில் ஏராளமானோர் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் மார்ச் 27 (இன்று) 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் சற்று முன்பு வரை 834 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகம், புதுச்சேரியில் தேர்தல் அலுவலகத்திற்கு வந்து டோக்கன் பெற்ற வேட்பாளர்களிடம் மட்டும் வேட்புமனு பெறப்பட்டு வருகிறது.
நாளை வேட்புமனு பரிசீலனையும், வேட்பு மனுக்களை திரும்பப்பெற மார்ச் 30 கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.