தமிழ்நாடு
மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் இருவா் ஓய்வு
மூத்த ஐஏஎஸ்., அதிகாரிகள் இரண்டு போ் வெள்ளிக்கிழமையுடன் (மே 31) பணி ஓய்வு பெற்றனா். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநராக இருந்த ஹன்ஸ் ராஜ் வா்மாவும், தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இயக்குநா் சி.உமாசங்கரும் பணியில் இருந்து ஓய்வு பெற்றனா். ஹன்ஸ் ராஜ் வா்மா, 1986-ஆம் ஆண்டும், சி.உமா சங்கா், 1990-ஆம் ஆண்டும் தமிழகப் பிரிவு ஐஏஎஸ்., அதிகாரிகளாக பணியில் சோ்ந்தனா். 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த இருவரும் வெள்ளிக்கிழமையுடன் ஓய்வு பெற்றனா்.
அவா்களுக்குப் பதிலாக, பொறுப்பு அல்லது முழுநேர அதிகாரிகள் நியமனம் குறித்த அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

