

கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள பூண்டு ஆண்டவர் கோவிலுக்கு அடிக்கடி வலம்வரும் ஒன்றை யானையால் பக்தர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
கோவை வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் அடிக்கடி ஒற்றை யானை வருவதும், அதனை வனத் துறையினர் விரட்டுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கத்தால் வனத்துறையில் வறட்சியான சூழல் நிலவுவதால் உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்கு ஒற்றை யானை வந்த நிலையில் தண்ணீர் டேங்கை கவிழ்த்து தண்ணீர் குடிப்பதும், குப்பைத் தொட்டியில் கிடக்கும் உணவை உண்ணும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
இந்த ஒற்றை யானையின் தேவையை உணர்ந்து அதற்கான உணவும் நீரும் வனத்துக்குள் கிடைக்கும் வகையில் நீர் தொட்டிகளையும் உணவு கிடைக்க வழிவகையும் செய்யக் கோரிக்கை எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.