2026-லும் திராவிட மாடல் ஆட்சிதான்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

2026-லும் திராவிட மாடல் ஆட்சிதான் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின் Center-Center-Chennai
Updated on
1 min read

2026-லும் திராவிட மாடல் ஆட்சிதான் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவற்கொரு குணமுண்டு!

தமிழ்நாட்டுக்குள் எப்படியாவது நுழைந்து இந்த மண்ணைப் பாழாக்கத் துடிக்கும் பா.ஜ.க.வுக்கும், அதற்குத் துணைபோகும் இனமானம் இல்லாத அடிமைகளுக்கும் தமிழ்நாட்டின் நுழைவு வாயிலான திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சவால் விடுகிறேன்…

எத்தனை ஏவல் அமைப்புகளை வேண்டுமானாலும் துணைக்கு அழைத்து வாருங்கள்!

2026-லும் திராவிட மாடல் ஆட்சிதான்! தமிழ்நாடு என்றுமே தில்லிக்கு OUT OF CONTROL-தான்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

யேமனின் எண்ணெய்த் துறைமுகத்தின் மீது அமெரிக்கா தாக்குதல்! 58 பேர் பலி!

முன்னதாக பொன்னேரியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய அரசையும், பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்தும் பல்வேறு கருத்துகளை முன்வைத்துப் பேசினார்.

அதில், எங்கள் தமிழ்நாடு எப்போதும் தில்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல்தான் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com