

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படையாக தவெக உள்ளது என்று கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தவெக தகவல் தொழில் நுட்பப்பிரிவு நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் பேசிய உரை ரெக்கார்டு செய்து காணொளி வாயிலாக ஒளிபரப்பப்பட்டது. அதில் விஜய் பேசுகையில், இந்த கூட்டம் நடக்கும் போதே உங்களிடம் பேச வேண்டும் என்று தான் நினைத்தேன்.
ஆனால் இங்க கொஞ்சம் நெட்வொர்க் பிரச்னை என்பதால் அப்படி செய்ய முடிவில்லை. அதனால்தான் விடியோ ரெக்கார்டு மெசேஜ் அனுப்பியிருக்கிறேன். இதன்மூலமாக உங்க எல்லாரையும் சந்திப்பதில் ரொம்ப மகிழ்ச்சி. இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படையாக தவெக உள்ளது.
இதனை நம்ம சொல்கிறதை விட மற்றவங்களே பார்த்து தெரிஞ்சுகிடுவாங்க. நீங்கள் இனி ரசிகர்கள் மட்டுமல்ல, விர்ச்சுவல் வாரியர்ஸ் என்றே அழைக்கத் தோன்றுகிறது. நீங்கள்(தவெகவினர்) மரியாதையாக, கண்ணியமாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.