சென்னை விமான நிலையத்தில் இருந்து மாநகர பேருந்து சேவை தொடக்கம்!

சென்னை விமான நிலையத்தில் இருந்து பேருந்து சேவை...
அமைச்சர் சிவசங்கர்
அமைச்சர் சிவசங்கர்
Updated on
1 min read

சென்னை விமான நிலையத்தில் இருந்து மாநகர பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளின் வசதிக்காக ஆதம்பாக்கத்திலிருந்து கிளாம்பாக்கம் கலைஞர் நுற்றாண்டு பேருந்து முனையம், தாம்பரத்திலிருந்து தெற்கு மலையம்பாக்கம் மற்றும் அனகாபுத்தூரிலிருந்து பிராட்வேக்கு பேருந்து இயக்கத்தினை இன்று, மீனம்பாக்கத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அமைச்சர் தா.மோ.அன்பரசன், கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

• தடம் எண்: 66எம்

தாம்பரத்திலிருந்து தெற்கு மலையம்பாக்கம் வரை 1 மகளிர் விடியல் பயண பேருந்து (வழி- பல்லாவரம், அனகாபுத்தூர், குன்றத்தூர், கொல்லச்சேரி, 400 அடி சாலை, மலையம்பாக்கம்) இயக்கப்படுகிறது.

• தடம் எண்: 18எஸ்

ஆதம்பாக்கம் NGO காலனி பேருந்து நிலையத்திலிருந்து - கிளாம்பாக்கம் வரை 2 மகளிர் விடியல் பயண பேருந்துகள் (வழி- கக்கன் பாலம், பிருந்தாவன் நகர், வானுவம்பேட்டை, தில்லை கங்கா நகர், மீனம்பாக்கம், தாம்பரம்) இயக்கப்படுகிறது.

• தடம் எண்: 60

அனகாபுத்தூரிலிருந்து பிராட்வே வரை 1 மகளிர் விடியல் பயண பேருந்து (வழி- பல்லாவரம், மீனம்பாக்கம், கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம் தேனாம்பேட்டை) இயக்கப்படுகிறது.

சிக்கிம் நிலச்சரிவு: 1000 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு!

இந்நிகழ்வின் போது, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் டாக்டர். பிரபுசங்கர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் எஸ்.அருண்ராஜ், பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஐ.கருணாநிதி, மாநகர் போக்குவரத்துக் கழக உயர் அலுவலர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com