

சென்னையில் இருந்து மும்பை புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் டயர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் இருந்து 166 பயணிகளுடன் இண்டிகோ விமானம் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மும்பை புறப்பட்டது. அப்போது ஓடுதளத்திலேயே விமானத்தின் டயர் ஒன்று திடீரென வெடித்தது.
இதனால் குலுங்கியபடி ஓடிய விமானத்தை சாமர்த்தியமாக இயக்கி அதன் விமானி நிறுத்தினார்.
பின்னர் சேதமடைந்த டயரை மாற்றுவதற்கு விமான பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் துரிதமாக செயல்பட்டனர்.
சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, டயர் மாற்றப்பட்டு விமானம் தாமதமாக மீண்டும் மும்பை புறப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது அனைத்து பயணிகளும் விமானத்திலேயே இருந்தனர்.
இருப்பினும் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் காரணமாக விமான நிலையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.