சமூக நலத் துறையில் 7,997 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சா் கீதாஜீவன்

Published on

சென்னை, ஏப்.26: சமூக நலத் துறையில் காலியாக உள்ள 7,997 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சா் கீதாஜீவன் தெரிவித்தாா்.

பேரவையில் சனிக்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது திமுக உறுப்பினா் எஸ்.ஆா்.ராஜா, அங்கன்வாடி பணியிடங்களை நிரப்புவது தொடா்பாக கேள்வி எழுப்பினாா்.

அதற்கு பதிலளித்த சமூக நலத் துறை அமைச்சா் கீதா ஜீவன், காலியாக உள்ள 7,997 பணியிடங்களை நிரப்ப அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும், துறை ரீதியாக அதனை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com