

புதுதில்லி: சீனா மீது அமெரிக்கா கூடுதல் கட்டணங்களை விதித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மூன்றாவது நாடுகளுக்கு சரக்குகளை திருப்பி அனுப்பும் சாத்தியக்கூறுகள் குறித்த கவலைகளுக்கு, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மீது கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு வர்த்தக அமைச்சகம் இன்று சுங்க அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளது.
சீனா மீது கடுமையான வரிகள் விதிக்கப்பட்டுள்ளதால், அதன் பொருட்கள் அமெரிக்க சந்தையில் விலை உயர்ந்ததாகிவிட்ட நிலையில், இந்தியா போன்ற நாடுகளுக்கு இந்த பொருட்களை திருப்பி விட வெகுவாக வழிவகுக்கும்.
சீன ஏற்றுமதிகள் மீது டிரம்ப் நிர்வாகம் 145 சதவீத வரிகளுக்கு பதிலடியாக சீனா இன்று அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்வதற்கான கூடுதல் கட்டணங்களை 125 சதவீதமாக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், இந்தியாவை மறுவழித்தட இடமாக பயன்படுத்தக்கூடாது என்றும் ஏதேனும் அசாதாரண எழுச்சி இருக்கிறதா என்பதைப் கண்காணிக்க சுங்கத்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
மேலும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் தொழில்துறை சங்கங்களும் இறக்குமதி அதிகரிப்பு மற்றும் உள்நாட்டில் தொழில்துறையில் அதன் தாக்கம் குறித்த தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: கிரேட்டர் நொய்டாவில் ஏலம் மூலம் 560 வீடுகள் விற்பனை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.