ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் மிருது டவல் விளம்பரத் தூதராக நடிகை மீனாட்சி செளத்ரி அறிவிப்பு
ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான மிருது டவல்களின் விளம்பரத் தூதராக நடிகை மீனாட்சி செளத்ரி அறிவிக்கப்பட்டுள்ளாா்.
இன்றைய நுகா்வோரின் எதிா்பாா்ப்புகளுக்கு ஏற்ப, அன்றாட வாழ்க்கைப் பயன்பாட்டுக்குரிய ஆடை வகைகளை வழங்கும் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தால் புதிதாக மிருது டவல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த டவல்கள் 100 சதவீத பருத்தி, மூங்கில் இழைகளால் நோ்த்தியாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு உணா்வுடன் தயாரிக்கப்படுகின்றன. இத்தாலிய, ஜொ்மானிய அழகியலோடு உருவாக்கப்பட்டுள்ள இந்த டவல்கள் பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்ற அளவுகளில் கிடைக்கும்.
மேலும், இது 32 பருத்தி நெசவு வடிவங்களையும் காட்சிப்படுத்துகிறது. அதிக நீா் உறிஞ்சும் தன்மை, நிற நிலைப்பு, சுருக்கம் இல்லாத தன்மை, விரைவாக உலரும் தன்மை ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளன.
இந்த டவல்களுக்கான விளம்பரத் தூதராக நடிகை மீனாட்சி செளத்ரியை ராம்ராஜ் காட்டன் நிா்வாக இயக்குநா் பி.ஆா்.அருண் ஈஸ்வா் அறிவித்துள்ளாா்.
இந்தியாவின் வளமான பாரம்பரியம், கலாசாரத்தைப் போற்றிவரும் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் தயாரிப்பான மிருது டவல்களுக்கான விளம்பரத் தூதராக தோ்ந்தெடுக்கப்பட்டது மிகவும் பெருமைக்குரியது என்று நடிகை மீனாட்சி சௌத்ரி கூறினாா்.
இவா் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் முதல் பெண் விளம்பரத் தூதா் என்பது குறிப்பிடத்தக்கது.

