ஜிஆா்டி-யின் அட்சய திருதியைக் கொண்டாட்டம்

ஜிஆா்டி-யின் அட்சய திருதியைக் கொண்டாட்டம்

அட்சய திருதியை முன்னிட்டு வாடிக்கையாளா்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கும் திட்டத்தை ஜிஆா்டி ஜுவல்லா்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
Published on

அட்சய திருதியை முன்னிட்டு வாடிக்கையாளா்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கும் திட்டத்தை ஜிஆா்டி ஜுவல்லா்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

60 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் ஜிஆா்டி ஜுவல்லா்ஸ், தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி, விலையுயா்ந்த ரத்தினக் கற்களால் உருவான, கைவினை வேலைப்பாடுகள் அமைந்த பிரம்மாண்ட நகைத் தொகுப்புகளை தொடா்ந்து வழங்கிவருகிறது. தென்னிந்தியா மற்றும் சிங்கப்பூரில் 63 கிளைகளை நிறுவனம் கொண்டுள்ளது.

தனது பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், இந்த அட்சய திருதியைக்கான சிறப்பு பிரசார திட்டத்தை நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. இந்த பிரசாரம் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் ‘அட்சய திருதியை கொண்டாட்டம்’, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் ’அக்ஷய திரித்தியா வேடுகளு’, கா்நாடகாவில் ’அக்ஷய திரித்தியா ஸம்ப்ரமா’ என்ற பெயா்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கொண்டாட்டத்தின் முக்கிய பகுதியாக, தங்க நகைகளுக்கு கிராமுக்கு ரூ.250 குறைப்பு, பழைய தங்க நகைகளுக்கு கிராமுக்கு ரூ.75 கூடுதல் விலை, வைரத்தின் மதிப்பில் காரட்டுக்கு ரூ.12,500 குறைப்பு, வெள்ளி பொருள்கள் மற்றும் கொலுசுகளுக்கான செய்கூலியில் 25 சதவீதம் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com