ரியல்மி 14 ப்ரோ 5 ஜி சீரிஸ் இந்திய வெளியீட்டு தேதி வெளியானது!

ரியல்மியின் 14 ப்ரோ 5 ஜி சீரிஸ் ஜனவரி 16 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
ரியல்மி 14 ப்ரோ 5 ஜி சீரிஸ் இந்திய வெளியீட்டு தேதி வெளியானது!
Updated on
1 min read

ஹைதராபாத்: ரியல்மியின் 14 ப்ரோ 5 ஜி சீரிஸ் ஜனவரி 16 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வரவிருக்கும் மாடல்களின் சில முக்கிய அம்சங்களை நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

நிறுவனத்தின் அறிக்கைகளின் பெயரில், இந்த ஸ்மார்ட்போன்கள் பியர்ல் ஒயிட், ஸ்யூட் கிரே மற்றும் பிகானீர் பர்ப்பிள் & ஜெய்ப்பூர் பிங்க் ஆகிய இந்திய பிரத்தியேக விருப்பங்கள் உள்பட 4 வெவ்வேறு வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்படும்.

இதையும் படிக்க: ரூ.85.83ஆக வரலாற்று சரிவில் இந்திய ரூபாய்!

கைபேசியின் அடிப்படை மாடல் மீடியாடெக் டைமென்சிட்டி 7300 எனர்ஜி சிப்செட் மூலம் இயக்கப்படலாம் என்றும், பிளஸ் வேரியண்ட் ஸ்னாப்ட்ராகன் 7எஸ் ஜென் 3 எஸ்ஒசி-யைப் பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை மாடல் 45 வாட் சூப்பர் ஓபன் லூப் மல்டி-ஸ்டெப் கான்ஸ்டன்ட்-கரண்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்ற நிலையில், பிளஸ் வேரியண்டில் 80 வாட் சூப்பர் ஓபன் லூப் மல்டி-ஸ்டெப் கான்ஸ்டன்ட்-கரண்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரிசையில் உள்ள இரண்டு ஸ்மார்ட்போன்களும் 6,000 எம்ஏஎச் பேட்டரிகளுடன் வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com