

இன்றைக்குப் பலர் பாலியல் பிரச்னைகளால் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். பலவகையான சோதனைகளைச் செய்து பார்த்தும் நோய்க்கான அறிகுறிகளையோ, காரணங்களையோ அறிய முடியாமல் கடைசியில் இது மனநோய் என்று கூறி, மனதை அமைதிப்படுத்தும் மாத்திரைகளைக் கொடுத்து அனுப்பி விடுவார்கள். உண்மையில் பாலியல் பிரச்னைகள் அனைத்துமே விசாக நட்சத்திரத்தின் கெட்ட கதிர்வீச்சுக்களால் உண்டாகின்றது. இதனால்தான் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களில் பலர் ஆண்மை, பெண்மைக் கோளாறுகளால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது.
விசாக நட்சத்திரம் பாலியல் உறுப்புகளைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.
விசாக நட்சத்திரத்தின் நல்ல கதிர்வீச்சுகள் பாலியல் உறுப்புகளுக்கு வலிமை கொடுக்கும். குழந்தைப் பாக்கியமும் உண்டாக்கும். கெட்ட கதிர்வீச்சுகள் பாலியல் உறுப்புகளைப் பாதிக்கச் செய்வதுடன் குழந்தை பாக்கியமும் இல்லாமல் செய்துவிடுகிறது. பிறக்கின்ற குழந்தைகளும் ஊனமுற்ற நிலையில் பிறக்க வைக்கிறது. இதற்கு விசாக நட்சத்திர தோஷம் என்பார்கள்.
செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமையன்று பிறந்தவர்களும் 23 செப்டம்பர் முதல் 20 நவம்பர் வரை பிறந்தவர்களும், விருச்சிகம் மற்றும் துலாம் ராசியில் பிறந்தவர்களும் விசாகம் நட்சத்திரத்தின் ஆட்சிக்குட்பட்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்குப் பாலியல் பிரச்னைகளுடன் வாய்வுத் தொல்லைகள், துர்நாற்றம், இன்ஃபெக்ஷன், தொற்று நோய்கள், இருமல், ஆஸ்துமா, அலர்ஜி, சளித்தொல்லைகள், சர்க்கரை நோய், மனப்பதட்டம், ஈறு மற்றும் கர்ப்பப் பையிலிருந்து இரத்தம் வெளியேறும் நோய்கள் அடிக்கடி உண்டாகும்.
விசாக நட்சத்திரத்தின் நண்பனாக விளாமரம் விளங்குகின்றது. விளா மரம் விசாக நட்சத்திரத்தின் நல்ல கதிர்வீச்சுகளைச் சுவாசித்து தன் உடலில் சேமித்து வைத்துக் கொள்ளும். அதைத் தன்னை தொடுபவர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருக்கும்.
விளாமரத்தை அரை மணி நேரம் கட்டிப் பிடிக்கலாம். அதன் நிழலில் ஓய்வு எடுக்கலாம். அம்மரத்தின் பொருட்களைக் கொண்டு மருத்துவம் பார்க்கலாம். விசாகம் நட்சத்திரத்தால் ஏற்பட்ட நோய்களும், தோஷங்களும் நீங்கி உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். பாலியல் உறுப்புகளுக்கு வலிமையும் கிடைக்கும்.
விளாமரத்தின் மருத்துவ குணங்கள்
விளாம்பழம் இதயத்திற்கு இன்பத்தையும், சக்தியையும் அளிக்கிறது.
வயிறு மற்றும் குடலுக்குச் சக்தி தருகிறது. விளாம்பழம் பித்த குணமுள்ளவர்களுக்கும், பித்தத்தால் உண்டாகும் நோய்களுக்கும் பயன்தரக் கூடியது.
வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்துகிறது. வாய் துர்நாற்றத்தைப் போக்குகிறது.
தொண்டையில் உண்டாகும் புண் மற்றும் கொப்புளங்களைக் குணமாக்க இதைக் கஷாயமாக்கி வாய் கொப்பளிக்கச் செய்வார்கள். தொண்டை வலியைப் போக்கவும், பல்லீறுகளுக்கு உறுதியளிக்கவும் இதைக் குடிப்பார்கள்.
விளாமரப்பட்டையை அரைத்துப் படை, வெண்குஷ்டம் ஆகியவற்றின் மீது பூசுவார்கள். இதன் வேர்ப்பட்டையை எடுத்துச் சாறு பிழிந்து அதிலிருந்து 50 கிராம் சாறெடுத்து அத்துடன் 7 எண்ணிக்கை மிளகு ,7 சொட்டு பசு நெய் கலந்து குடிப்பதால், குழந்தை பிரசவித்த பெண்களின் வயிற்று உள்ளுறுப்புகளுக்குச் சக்தி கிடைக்கும்.
பித்த கொதிப்பைத் தணிக்க இதன் இலைச்சாற்றுடன் சிறிது வெண் சீரகம் மற்றும் சர்க்கரை கலந்து குடிப்பார்கள்.
இதன் குச்சியால் ஈறுகள் பலப்படுகிறது.
விளாமரத்தை எங்கும் பரவலாக வளர்க்கப்படுகிறது. விசேஷமாக வாணியம்பாடியிலுள்ள டாக்டர் எஸ்.அக்பர்கவுஸரின் முகல் கார்டன் வானவியல் மூலிகைத் தோட்டத்தில் விளா மரங்களைக் காணலாம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.