படத்துக்கு நீங்க ஒரே நெகட்டிவ்வா பெயர் வைக்கறீங்களே... தீஞ்ச தோசை, காய்ந்த மலர், சுடுகாட்டு கிணறு.. அடுத்து என்ன?'
'அழுகின தேங்காய்..'
-என்.எஸ்.வி.குருமூர்த்தி, கும்பகோணம்.
'கதை பிடிச்சிருந்தால்தான் அந்த நடிகர் கால்ஷீட் தருவாராம்.. '
'இது நல்ல கதையா இருக்க.. வேற நடிகரை பாருய்யா...?'
'சினிமா விமர்சனத்துல 'இது படமல்ல; பாடம்'-என்று கடைசியா ஒரு வரி சேர்த்து தப்பா போச்சாம்.. '
'ஏன் என்னாச்சு...'
'அதைப் படிச்சிட்டு மாணவர்கள் யாருமே படம் பார்க்க வரவில்லையாம்...'
'சார்.. கனவு சீன் ரொம்பத் தத்ரூபமா அமைந்திருக்கு...'
'ஒரு கவர்மென்ட் ஆபிஸில் எடுத்தது சார்...'
'இந்த டாக்டரை பொருத்தவரைக்கும் ஆபரேஷன் தியேட்டருக்கும், சினிமா தியேட்டருக்கும் ஒரேயொரு வித்தியாசம்தான்..'
'ஆபரேஷன் தியேட்டர்னா சீனியர் நர்ஸையும், சினிமான்னா ஜூனியர் நர்ஸையும் அழைச்சிட்டு போவார்...'
-தஞ்சை வி.ரேவதி
'சார்.. நீங்க எதுக்கு சார் ரிசப்ஷனில் உட்காந்து டிஸ்கஷன் பண்ணலாமுன்னு சொல்றீங்க?'
'இது மினிமம் பட்ஜெட் படம்.. அதுக்குதான்...'
'படத்தோட ரிசல்ட் கேண்டீன் முதலாளிக்கு கூட தெரிஞ்சிருக்குப் போல..?'
'எப்படி சொல்றே..'
'தலைவலி, தைலம், மாத்திரையெல்லாம் விற்கிறாரே...'
'படத்துல சம்பந்தமே இல்லாம ஒரு கார் வேகமாக வருதே...?'
'படம் ஸ்லோன்னு ஒரு பேச்சு வரக் கூடாதுல்ல...'
'நம்ம கதையைத் திருடி படம் எடுத்திருக்கான்...'
'இல்லை.. நீங்கத் திருடின கதையைதான் இவனும் திருடியிருக்கான்...'
'மினிமம் பட்ஜெட் படம் சார்...'
'அதுக்காக ஒரே காஸ்ட்யூமை துவைச்சு போட சொல்றது ஓவர்...'
'சார்... திருச்சி வந்தா சொல்லுங்க..?'
'இது பஸ் இல்லை.. சினிமா தியேட்டர்...'
'படத்தை முழுக்க, முழுக்க கொரியாவில் எடுக்கப் போறீங்களா?'
'கதையை அங்கேயிருந்து எடுக்கறோம். படத்தை தாய்லாந்தில் எடுக்கறோம்..'
'என்ன டிக்கெட் 'ரோ' மட்டும் போட்டிருக்கு.. சீட் நம்பர் இல்லையே..?'
'தியேட்டரே ப்ரீயா இருக்கு சார்.. உங்களுக்கு பிடித்த நம்பரில் உட்காருங்க?'
-அ.ரியாஸ், சேலம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.