ஓ.. குருவி.. சிட்டுக் குருவி..

இந்தியாவில் சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவதை அறிந்த நாக்பூரைச் சேர்ந்த அசோக் திவானி, அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
ஓ.. குருவி.. சிட்டுக் குருவி..
Updated on
1 min read

இந்தியாவில் சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவதை அறிந்த நாக்பூரைச் சேர்ந்த அசோக் திவானி, அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

அவர் கூறியது:

'2018-இல் 'ராயல் சொசைட்டி பாஃர் தி ப்ரொடெக்சன் ஆஃப் பேர்ட்' வெளியிட்ட அறிக்கையில், 'இந்தியாவில் சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை 60 % குறைந்துவிட்டன. சில பகுதிகளில் இந்தக் குறைபாடு கடுமையாக உள்ளது. குறிப்பாக, ஆந்திரத்தில் 80%, கேரளா, குஜராத், ராஜஸ்தானில் 20% குறைந்து விட்டன‘ என குறிப்பிட்டிருந்தது.

வங்கிப் பணியில் இருந்து 2012-இல் ஓய்வு பெற்றவுடன் நான் நூலகங்களுக்கு சென்று சிட்டுக் குருவி குறித்த தகவல்களைச் சேகரித்தேன். 2003-இல் திருவனந்தபுரத்தில் சிட்டுக் குருவிகள் முற்றிலுமாக ஒழிந்து விட்டன. 2013 முதல் பல இடங்களில் சிட்டுக் குருவியே இல்லை. லக்னோவிலும் நிலைமை ரொம்ப மோசம் என்று பல தகவல்களை அறிந்தேன்.

சிட்டுக் குருவிகளின் குறைவுக்கு நாம் தற்போது கட்டும் வீடுகளும் காரணம். அடுத்து சுற்றுச்சூழல் சத்தம், மாசான காற்று, வயல்களில் ரசாயன உரங்கள் போன்றவைதான்.

இவற்றுக்கு இருப்பிடமாக கூடுகளை கட்டுவது எனமுடிவு செய்தேன். எனது வீட்டின் மேஜையில் கூடு செய்யத் தேவைப்படும் பசை, குச்சிகள் 'பென்சில்கள்' ஒரு ரூலர்,கத்திரிக்கோல், காகித கட்டர்கள் இடம் பிடித்தன. இரண்டு நாள்களில் ஒரு ஜோடி வந்து இலைகளை வைத்தன. தொடர்ந்து கூடு கட்ட ஆரம்பித்தன.

எனது குருவி வீடு 14*18 சென்டி மீட்டர் என்ற அளவில் பெரியதாகியுள்ளது. முதலில் இலவசமாய் கொடுத்தேன். ஒரு நண்பர் அதனை வாங்கிப் போய் தன் வீட்டு ஷோகேஸில் வைத்து விட்டார். அதனால், ஒரு கூடு 40 ரூபாய்க்கு விற்கிறேன்.

ரண்டு மாடி, மூன்று மாடி கூடுகளும் உண்டு. இந்த பெட்டிகள் ஏழு முதல் எட்டு ஆண்டுகள் வரை பயன்படும்' என்கிறார் அசோக் திவானி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com