லாவண்டர் எண்ணெய்யின் பயன்கள்!

லாவண்டர் என்று பொதுவாக அழைக்கப்படும் லாவண்டுவா என்ற பூச்செடி லாசியாமி என்ற புதினா குடும்பத்தைச் சார்ந்தது. மித வெப்பமான நிலையில்தான் இச்செடி வளரும்.
லாவண்டர் எண்ணெய்யின் பயன்கள்!
Updated on
1 min read


லாவண்டர் என்று பொதுவாக அழைக்கப்படும் லாவண்டுவா என்ற பூச்செடி லாசியாமி என்ற புதினா குடும்பத்தைச் சார்ந்தது. மித வெப்பமான நிலையில்தான் இச்செடி வளரும்.

அழகிய ஊதா நிறப்பூக்கள் கொண்ட இப்பூவின் வாசனை மிகவும் ரம்மியமாக இருக்கும்.

இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் பெரும்பாலும் குளியல் பொருட்கலில் பயன்படுத்தப்படுகிறது.

இது தவிர இதன் வாசனை, எண்ணெய் மருந்து பொருள்கள் தயாரிக்கவும், சமையலுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

39 வகையான வெவ்வேறு லாவண்டர் வகைகள் உலகம் முழுவதும் உள்ளன. ஆனால், அவை இரண்டு முக்கிய வகைகளைக் கொண்டிருக்கின்றன.

லாவண்டர் வாசனை எண்ணெய் - மனச்சோர்வு, தூக்கமின்மை, மன அழுத்தம், மன நோய், ஒற்றைத் தலைவலி போன்ற நோய்கள் கட்டுக்குள் கொண்டு வர துணை புரிகிறது.

லாவண்டர் எண்ணெய் - கேக்குகள் மற்றும் இனிப்பு வகைகளுக்கு வாசனை மற்றும் இனிப்புச்சுவை கொடுக்க பயன்படுத்தப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com