

பொருட்பால் - அதிகாரம் 79 - பாடல் 6
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
- திருக்குறள்
நேருக்கு நேர் சந்தித்தால்
முகத்தில் சிரிப்பு காட்டலாம்
பகையுணர்வை மறைத்துவிட்டு
பகட்டாகவும் சிரிக்கலாம்
நடிப்புச் சிரிப்பு நட்பல்ல
போலித்தனம் கொண்டது
உள்ளத்தால் சிரிப்பதே
உயர்ந்த நட்பு ஆகுமே
-ஆசி.கண்ணம்பிரத்தினம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.