1. கண்களுக்கு இது அலங்காரம்தான், ஆனால் பார்வைக்கு உத்தரவாதம்...
2. இரண்டோ மூன்றோ தோல்களை உரித்தால் முத்து வரும்...
3. முகம் காட்டினால் முகம் தெரியும் முதுகு காட்டினால் முதுகு தெரியாது...
4. அத்துவானக் காட்டில் தொங்கும் இனிப்புப் பொட்டலத்துக்கு ஆயிரம் பேர் காவல்...
5. சின்னப் பெட்டிக்குள் சிங்கார கீதம் ஆயிரம்...
6. கைக்குள் அடங்கும் பிள்ளை கதை நூறு
சொல்லும் பிள்ளை..
7. ஒற்றைப் பெண்ணுக்கு ஓராயிரம் புடவை...
8. குழந்தைக்கு எந்தக் கை பலமான கை?
விடைகள்
1. மூக்குக் கண்ணாடி
2. பூண்டு
3. முகம் பார்க்கும் கண்ணாடி
4. தேன்கூடு
5. ஆர்மோனியப் பெட்டி
6. புத்தகம்
7. வெங்காயம்
8. அழுகை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.