சொல்லுதல் - என்ற சொல்லுக்கு, தமிழ்மொழியில் ஏறக்குறைய 39 சிறப்புப் பொருள்கள் (வகைகள்) உள்ளன. இவை நம் தமிழ்மொழிக்கே உரிய தனிச்சிறப்பாகும்.
1. அசைத்தல் -
அசையழுத்தத்துடன் சொல்லுதல்
அசையழுத்தம்
2. அறைதல் -
அடித்து (வன்மையாய் மறுத்து)
சொல்லுதல்
3. இசைத்தல் - ஓசை வேறுபாட்டுடன் சொல்லுதல்
4. இயம்புதல் - இசைக்கருவி இயக்கிச் சொல்லுதல்
5. உரைத்தல் -
அருஞ்சொற்கு அல்லது செய்யுட்குப் பொருள் சொல்லுதல்
6. உளறுதல் - ஒன்றிருக்க ஒன்றைச் சொல்லுதல்
7. எண்ணுதல் - என்று சொல்லுதல்
8. ஓதுதல் - காதுக்குள் மெல்லச் சொல்லுதல்
9. கத்துதல் - குரலெழுப்பிச் சொல்லுதல்
10. கரைதல் - அழைத்துச் சொல்லுதல்
11. கழறுதல் - இடித்துச் சொல்லுதல்(இடித்துரைத்தல்)
12. கிளத்தல் -
இன்னதென்று குறிப்பிட்டுச்
சொல்லுதல்
13. கிளத்துதல் - குடும்ப வரலாறு சொல்லுதல்
14. குயிலுதல் குயிற்று -
குயில்போல் இனிய குரலில்
சொல்லுதல்
15. குழறுதல் - நாத்தழுதழுக்கச் சொல்லுதல்
16. கூறுதல் - கூறுபடுத்திச் சொல்லுதல்
17. சாற்றுதல் - பலர் அறியச் சொல்லுதல்
18. செப்புதல் - வினாவுக்கு விடை சொல்லுதல்
19. நவிலுதல் - நாவினால் ஒலித்துப் பயிலுதல்
20. நுதலுதல் - ஒன்றைச் சொல்லித் தொடங்குதல்
21. நுவலுதல் - நூலின் நுண் பொருள் சொல்லுதல்
22. நொடித்தல் - கதை சொல்லுதல்
23. பகர்தல் -
பண்டங்களைப் பகுத்து விலை
சொல்லுதல்
24. பறைதல் -
மறை (ரகசியம்) வெளிப்படுத்திச்
சொல்லுதல்
25. பன்னுதல் - நிறுத்தி நிறுத்திச் சொல்லுதல்
26. பனுவுதல் - செய்யுளால் புகழ்ந்து சொல்லுதல்
27. புகலுதல் - விரும்பிச் சொல்லுதல்
28. புலம்புதல் - தனக்குத்தானே சொல்லுதல்
29. பேசுதல் - ஒரு மொழியில் சொல்லுதல்
30. பொழிதல் - இடைவிடாது சொல்லுதல்
31. மாறுதல் - உரையாட்டில் மாறிச் சொல்லுதல்
32. மிழற்றுதல் - குழந்தையைப் போல் சொல்லுதல்
33. மொழிதல் -
சொற்களைத் தெளிவாக விளக்கிச் சொல்லுதல்
34. வலத்தல் -
கேட்பார் மனத்தைப் பிணிக்கச்
சொல்லுதல்
35. விடுதல் - மெள்ள வெளிப்பட்டுச் சொல்லுதல்
36. விதத்தல் - சிறப்பாக எடுத்துச் சொல்லுதல்
37. விள்ளுதல் -
வெளிவிட்டு (இடைவெளி)
சொல்லுதல்
38. விளத்துதல் - விவரித்துச் சொல்லுதல்
39. விளம்புதல் - ஓர் அறிவிப்பைச் சொல்லுதல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.