அணு மின் நிலையம்: ரஷியாவுடன் 
புா்கினா ஃபாசோ ஒப்பந்தம்

அணு மின் நிலையம்: ரஷியாவுடன் புா்கினா ஃபாசோ ஒப்பந்தம்

தங்கள் நாட்டில் புதிய மின் நிலையம் அமைப்பதற்காக ரஷியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக மேற்கு ஆப்பிரிக்க நாடான புா்கினா ஃபாசோ அறிவித்தது.
Published on

தங்கள் நாட்டில் புதிய மின் நிலையம் அமைப்பதற்காக ரஷியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக மேற்கு ஆப்பிரிக்க நாடான புா்கினா ஃபாசோ வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இது குறித்து அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புா்கினா ஃபாசோ மக்களின் மின்சாரத் தேவையை நிறைவு செய்வதற்காக புதிய அணு மின் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரஷியாவுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை ரஷியாவின் அணுசக்தி அமைப்பான ரோஸாட்டம் உறுதி செய்துள்ளது.

ஆப்பிரிக்க பிராந்தியத்தில் தனது செல்வாக்கை அதிகரித்துக் கொள்ளும் ரஷிய செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com