மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிடும் நோக்கியா 
மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிடும் நோக்கியா 

மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிடும் நோக்கியா 

செல்போன் தொழில்நுட்பத்தில் நோக்கியோ நிறுவனத்திற்கு என்றும் தனிப்பெயர் இருக்கிறது. ஆரம்பகால கைப்பேசிகளில் நோக்கியோவே முதன்மையான நிறுவனமாக இருந்து வந்தது.

செல்போன் தொழில்நுட்பத்தில் நோக்கியோ நிறுவனத்திற்கு என்றும் தனிப்பெயர் இருக்கிறது. ஆரம்பகால கைப்பேசிகளில் நோக்கியோவே முதன்மையான நிறுவனமாக இருந்து வந்தது. பிற்காலத்தில் ஸ்மார்ட்போன்களின் வருகைக்கு பின் தன்னுடைய சந்தையை இழக்கத் தொடங்கியது. இன்றும் ஸ்மார்ட்போன் சந்தை விற்பனையில் முதல் ஐந்து இடத்தில் கூட இல்லாத இந்நிறுவனம் தன்னுடைய ஒவ்வொரு புதிய தொழில்நுட்பத்திலும் கவனிக்கப்பட்டு வருகிறது . 

அந்த வகையில் தற்போது இந்நிறுவனம் மூன்று புதிய ஸ்மார்ட்போன்கள் ஆடியோ பாகங்களை  வெளியிட இருக்கிறது . நோக்கியா எக்ஸ் ஆர்  20 , நோக்கியா 6310 , நோக்கியா சி  30 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன்களில் துல்லியத்துடன் கேட்கக் கூடிய ஆடியோ வசதியும் இடம்பெற்று இருக்கிறது.

இதுகுறித்து எச்.எம்.டி குளோபல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஃப்ளோரியன் சீச் "நோக்கியா எக்ஸ் ஆர் 20 யை  அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் - எங்கள் வர்த்தக முத்திரையான  நேர்த்தியுடன் கூடிய நோர்டிக் வடிவமைப்பில்  நீண்ட ஆயுளைக் கொண்ட   தொலைபேசியை   நுகர்வோர் மற்றும் நிறுவனங்களுக்காக நாங்கள் உருவாக்கியுள்ளோம் என்றும்   எக்ஸ் - சீரியஸ் மற்றும் சி - சீரியஸ் களில் வெளியான நோக்கியா ஆக்கங்களிலிருந்து மேலும்  புதுப்பித்து   நம்பிக்கையான, தரமான , நீண்ட காலம் உழைக்கும் தன்மையில் இதை உருவாக்கியிருக்கிறோம்" என்று தெரிவித்தார். 

நோக்கியோ எக்ஸ் ஆர் 20  ஸ்மார்ட்போன் அதிகப்படியான வெப்பத்தைத் தாங்கக்  கூடியது என்றும் , 1.8 எம் ட்ராப்ஸ் மற்றும்  1 மணி நேரம் நீரில் கிடந்தாலும் எவ்வித பாதிப்பும் அடையாது எனவும்  கொரில்லா விக்ட்ஸ் திரையுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனின் ஆயுளை பரிசோதிக்க பிரபல கால்பந்தாட்ட ஜாம்பவான் ராபர்டோ கார்லோஸ் மற்றும் பெண் உலக சாம்பியன்   லிசா சிமோச்சேவும் தொடர் பரிசோதனைகள் மூலம் அதன்  தரத்தை உறுதி செய்தனர்.

"ஒரு கால்பந்து வாங்கும் உதையை ஒரு செல்போன் தாங்குவது அத்தனை எளிதானது அல்ல. நோக்கியா எக்ஸ்.ஆர் 20 இந்த உதைகளுக்கு தாங்கும் என்பதை நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. இனி நான் தொழில் முறையாக விளையாட முடியாது என்றாலும் பந்தை உதைக்கும் வேகம் எனக்குத் தெரியும் . இது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது " எனத் தெரிவித்திருக்கிறார் பிரேசிலின் உலககோப்பை ஆட்டக்காரர் ராபர்டோ  கார்லோஸ் .

நோக்கியா எக்ஸ்ஆர் 20, 48 எம்பி மற்றும் 13 எம்பி  என இரண்டு  கேமராவுடனும்  சீஸ்  ஒளியியல், ஓசோ இடம் சார்ந்த  ஆடியோ மற்றும் புதுமையான இமேஜிங் தீர்வுகளைக்  கொண்டுள்ளது.

மற்றொரு ஸ்மார்ட்போன் சி 30 , 6.82 இன்ச் அளவில் எச் டி தொடுதிரையுடன் நீண்ட நேரம் தாங்கும்  பேட்டரி அமைப்பைக் கொண்டு வெளிவருகிறது .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com