தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மகாராஷ்டிரத்துக்கு நல்ல செய்தி: ஒரே நாளில் 22 நோயாளிகள் குணமடைந்தனர்

நாட்டிலேயே அதிக கரோனா நோயாளிகளைக் கொண்டிருக்கும் மாநிலமாகக் கருதப்படும் மகாராஷ்டிரத்துக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக இன்று ஒரே நாளில் 22 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

News image
Updated On :10 ஏப்ரல் 2020, 5:11 am

நாட்டிலேயே அதிக கரோனா நோயாளிகளைக் கொண்டிருக்கும் மாநிலமாகக் கருதப்படும் மகாராஷ்டிரத்துக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக இன்று ஒரே நாளில் 22 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் இஸ்லாம்பூர், சங்லி பகுதிகளில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 26 பேரில் 22 பேர் சிகிச்சையின் பலனாக பூரண குணமடைந்து தொடர்ந்து எடுக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில் கரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளும் விரைவில் குணமடைவார்கள் என்ற நம்பிக்கையை மருத்துவப் பணியாளர்களுக்கும், நோயாளிகளுக்கும் இது ஏற்படுத்தியுள்ளது. 

அதே சமயம், மகாராஷ்டிர மாநிலத்தில் புதிதாக 229 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் மட்டும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,364 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 125 பேர் குணமடைந்துள்ளனர். 97 பேர் மரணம் அடைந்துவிட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.